கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் சென்னை அணி + "||" + IPL Cricket Chennai team tops the points table

ஐ.பி.எல். கிரிக்கெட்: புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் சென்னை அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்: புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் சென்னை அணி
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.
சார்ஜா,

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் 35-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் படிக்கல் மற்றும் கேப்டன் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் குவித்தது.

அரை சதம் விளாசிய விராட் கோலி, 53 ரன்களில் பிராவோ பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்துவந்த டிவில்லியர்ஸ் 12 ரன்களில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். அதிரடியாக ஆடிய படிக்கல் 50 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 70 ரன்கள் குவித்து ஷர்துல் தாக்குர் பந்து வீச்சில் அவுட் ஆனார். 

பின்னர் வந்த பெங்களூரு வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 38 ரன்களில் கேட்ச் ஆனார். டுபிளிசிஸ் 31 ரன்களிலும், மொயீன் அலி 23 ரன்களிலும் கேட்ச் கொடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

சுரேஷ் ரெய்னா(17 ரன்கள்), கேப்டன் தோனி(11 ரன்கள்) இருவரும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியாக சென்னை அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதுவரை 9 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை அணி, 7 வெற்றிகளும் 2 தோல்விகளும் பெற்று 14 புள்ளிகளை பெற்றுள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், நெட் ரன் ரேட் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து 2-வது இடத்தில் டெல்லி அணியும், 3-வது இடத்தில் பெங்களூரு அணியும் உள்ளன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 164 ரன்கள் குவித்துள்ளது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2-வது இடத்தை பிடிக்குமா பெங்களூரு?
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டின் கடைசி லீக்கான இந்த ஆட்டத்தின் முடிவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: 86 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 171 ரன்கள் குவித்தது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணி முதலாவதாக பேட்டிங்
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.