வாழ்வா, சாவா மோதலில் ஐதராபாத்-பஞ்சாப்


வாழ்வா, சாவா மோதலில் ஐதராபாத்-பஞ்சாப்
x
தினத்தந்தி 24 Sep 2021 11:09 PM GMT (Updated: 24 Sep 2021 11:09 PM GMT)

இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி ஒரு வெற்றி, 7 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

இந்த ஒரு வெற்றியும் அந்த அணி தொடக்க லீக்கில் பஞ்சாப்புக்கு எதிராக பெற்றது தான். இனி எஞ்சிய 6 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்று குறித்து ஐதராபாத் அணி கொஞ்சமாவது சிந்தித்து பார்க்க முடியும். ஆனால் இன்றைய ஆட்டத்திலும் வீழ்ந்தால், அந்த அணி வெளியேற வேண்டியது தான். எனவே டேவிட் வார்னர், விருத்திமான் சஹா, மனிஷ் பாண்டே, கேப்டன் வில்லியம்சன், கேதர்ஜாதவ் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டினால் தான் எழுச்சி பெற முடியும்.

பஞ்சாப் கிங்ஸ் அணி 6 புள்ளியுடன் (3 வெற்றி, 6 தோல்வி) பட்டியலில் 7-வது இடம் வகிக்கிறது. ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் வெற்றியின் விளிம்பில் இருந்த பஞ்சாப் அணி, கடைசி 2 ஓவர்களில் 8 ரன்கள் கூட எடுக்க முடியாமல் 2 ரன் வித்தியாசத்தில் பரிதாபகரமாக தோல்வியை தழுவியது. பஞ்சாப் அணிக்கும் இன்றைய ஆட்டம் கிட்டத்தட்ட வாழ்வா-சாவா? மோதல் போன்றது தான். தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். கடந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்ட ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்ல் அணிக்கு திரும்புவாரா? என்பது குறித்து தகவல் இல்லை. இது பஞ்சாப் அணியின் 200-வது ஐ.பி.எல். ஆட்டம் என்பது சிறப்பு அம்சமாகும்.

Next Story