கிரிக்கெட்

பிராவோவுடன் அடிக்கடி சண்டை வரும். சொல்கிறார் டோனி. + "||" + MS Dhoni reveals fight with 'brother' Dwayne Bravo over slower balls after CSK hammer RCB

பிராவோவுடன் அடிக்கடி சண்டை வரும். சொல்கிறார் டோனி.

பிராவோவுடன் அடிக்கடி சண்டை வரும். சொல்கிறார் டோனி.
பந்துவீசும் போது எனக்கும் பிராவோவுக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும் என டோனி கூறியுள்ளார்.
சார்ஜா.
      ஐ.பி.எல் கிரிக்கெட்டின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில்  157  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் புள்ளிப்பட்டியளில் முதலிடத்திற்க்கு முன்னேறியது.
      
 போட்டியின் முடிவில் பிராவோவை பற்றி பேசிய டோனி,  ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் மொயீனிடம் பந்துவீசச்சொன்னேன். ஆனால் மனதை மாற்றி பந்தை பிராவோவிடம் கொடுத்தேன். அவர் கடினமான சூழ்நிலைகளில் விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். அதே போலவே அவர் விக்கெட்டை வீழ்த்தினார். மெதுவாக பந்து வீசி விக்கெட் எடுக்கக்கூடியவர். அவரது மெதுவான பந்துவீச்சு பல பேட்ஸ்மேன்களுக்கு தெரியும். அதனால் நான் அவரிடம் ஆறு பந்துகளையும் பல விதமாக வீசுமாறு கூறுவேன். இதில் எனக்கும் பிராவோவுக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும். அவரை நான் எப்போதும் சகோதரராகவே அழைப்பேன். என அவர் கூறினார்.