சென்னை அணியின் ஆதிக்கம் தொடருமா?


சென்னை அணியின் ஆதிக்கம் தொடருமா?
x
தினத்தந்தி 25 Sep 2021 11:25 PM GMT (Updated: 25 Sep 2021 11:25 PM GMT)

முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 வெற்றி, 2 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு லீக் சுற்றுடன் வெளியேற்றப்பட்ட சென்னை அணி இந்த சீசனில் நன்கு எழுச்சி பெற்று இருக்கிறது. குறிப்பாக 2-வது கட்ட சீசனில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளை அடுத்தடுத்து போட்டுத்தாக்கியதால் நம்பிக்கை அதிகமாகியுள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக தென்படும் சென்னை அணியின் ஆதிக்கம் இன்றைய ஆட்டத்திலும் நீடித்தால் ஏறக்குறைய ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்து விடும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று இருக்கிறது. இந்த அணியும் 2-வது கட்ட பகுதியில் பெங்களூரு, மும்பையை தோற்கடித்து தாங்கள் அபாயகரமான அணி என்பதை நிரூபித்துள்ளது. புதிய வரவான வெங்கடேஷ் அய்யரின் சூறாவளி பேட்டிங்கும், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரினின் சுழல் ஜாலமும் அவர்களுக்கு கைகொடுக்கிறது. எளிதில் கணிக்க முடியாத அளவுக்கு சுழற்பந்து வீசும் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, சென்னை பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக திகழ்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். ஏற்கனவே சந்தித்த லீக்கில் இவ்விரு அணிகளும் 200 ரன்களுக்கு மேல் குவித்த போதிலும் அதில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story