கிரிக்கெட்

ஓய்வு பெறுகிறார் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி + "||" + England all-rounder Moin Ali is set to retire

ஓய்வு பெறுகிறார் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி

ஓய்வு பெறுகிறார் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார்.
இங்கிலாந்து, 

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அறிவிக்க உள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

கேப்டன் ஜோ ரூட் மற்றும் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஆகியோரிடம் தன்னுடைய  டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்த தகவலை தெரிவித்து உள்ளதாக தெரிகிறது.

34 வயதாகும் அவர், இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,914 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், தனது ஆஃப் ஸ்பின் மூலம் 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.