கிரிக்கெட்

டெல்லி அணியின் ஆதிக்கம் தொடருமா? + "||" + Will the Delhi team continue to dominate in IPL match?

டெல்லி அணியின் ஆதிக்கம் தொடருமா?

டெல்லி அணியின் ஆதிக்கம் தொடருமா?
இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.
2-வது கட்ட ஆட்டத்தை கொல்கத்தா அணி மிரட்டலாக தொடங்கியது எனலாம். அந்த அணி பெங்களூரு, மும்பை அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தியது. ஆனால் கடந்த லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான சென்னை அணியிடம் வீழ்ந்தது. இறுதி வரை போராடிய அந்த அணி கடைசி பந்தில் தான் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. கொல்கத்தா அணியின் பேட்டிங்கில் ராகுல் திரிபாதி, புதிய வரவான வெங்கடேஷ் அய்யர், சும்பான் கில், ஆந்த்ரே ரஸ்செல் என அதிரடிக்கு பஞ்சம் கிடையாது. சுழற்பந்து வீச்சில் சுனில் நரின், தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி அளிக்கக்கூடியவர்கள்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று ஏறக்குறைய அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை உறுதி செய்து விட்டது. கடந்த இரண்டு லீக் ஆட்டங்களில் அந்த அணி ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்தது. பேட்டிங்கில் ஷிகர் தவான் (430 ரன்கள்), பிரித்வி ஷா, முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், கேப்டன் ரிஷாப் பண்ட் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். காஜிசோ ரபடா, அன்ரிச் நோர்டியா ஆகியோர் துல்லியமான வேகப்பந்து வீச்சு மூலம் கலக்கி வருகிறார்கள். சார்ஜா மைதானத்தில் பெரும்பாலும் ரன்மழைக்கு குறைவு இருக்காது. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இடம் பெற்று இருப்பதால் இந்த ஆட்டத்தில் ரன் வேட்டை வேகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த தொடரில் டெல்லிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்த கொல்கத்தா அணி அதற்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க எல்லா வகையிலும் போராடும். அதேநேரத்தில் டெல்லி அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி முதலிடத்துக்கு முன்னேற முனைப்பு காட்டும். எனவே இந்த ஆட்டம் அதிரடியும், பரபரப்பும் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கொல்கத்தாவின் கனவை கலைக்குமா ஐதராபாத்?
முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்வி என 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி மீதமுள்ள 2 ஆட்டங்களில் வெற்றி கண்டு ரன்ரேட்டிலும் வலுவாக இருந்தால் ‘பிளே-ஆப்’ சுற்றை பற்றி நினைத்து பார்க்கலாம்.
2. வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் கொரோனாவால் பாதிப்பு: கொல்கத்தா-பெங்களூரு ஆட்டம் தள்ளிவைப்பு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானதால் ஆமதாபாத்தில் நேற்று இரவு நடக்க இருந்த கொல்கத்தா-பெங்களூரு அணிகள் இடையிலான ஆட்டம் தள்ளிவைக்கப்பட்டது.