கிரிக்கெட்

ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு 128 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி + "||" + KKR needs 128 runs to win

ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு 128 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி

ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு 128 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி
இன்று நடைபெற்று வரும் டெல்லிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற 128 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சார்ஜா,

இன்று நடைபெற்று வரும் 41-வது ஐ.பி.எல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினர்.

கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் டெல்லி அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பவர்பிளே ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது. 

டெல்லி அணி தரப்பில்  அதிகபட்சமாக கடைசி வரை போராடிய ரிஷப் பண்ட் 36 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார்.  20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கொல்கத்தா அணியின் சுனில் நரைன் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.கொல்கத்தா அணி தரப்பில் லோக்கி பெர்குசன், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சவுத்தி 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் 2021- சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தாவை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்; 4-வது முறையாக கோப்பையை வென்றது சென்னை
ஐ.பி.எல். இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சென்னை அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா
இன்று நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. கொல்கத்தாவில் தசரா பண்டிகை கோலாகலம்; புர்ஜ் காலிபா வடிவமைப்பில் அலங்காரம்
கொல்கத்தாவில் தசரா பண்டிகையை ஒட்டி புர்ஜ் காலிபா போன்ற வடிவமைப்பில் பந்தல் அலங்காரம் அமைக்கப்பட்டது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்துள்ளது.