கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி + "||" + KKR beats Delhi by 3 wickets

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சார்ஜா,

ஐ.பி.எல் போட்டியில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதின.  இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினர்.

கொல்கத்தா அணியின் அபார பந்துவீச்சால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். வெங்கடேஷ் ஐயர் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய சுப்மான் கில்  33 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 67 ரன்களுக்கு முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், பின்னர் வந்த ராணா மற்றும் சுனில் நரைன் நிலைத்து நின்று ஆடி கொல்கத்தா அணியை வெற்றி பெறச் செய்தனர்.  சிறப்பாக ஆடிய ராணா 27 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 36 ரன்கள் எடுத்தார்.

சுனில் நரைனின் அதிரடியால் ஆட்டத்தின் 16-வது ஓவரில் கொல்கத்தா அணி 21 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. அதிரடியாக ஆடிய சுனில் நரைன் 10 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை  இழந்து 130 ரன்கள் எடுத்து  3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.

டெல்லி அணி தரப்பில் அவேஷ் கான் 3 விக்கெட்டுகளை  வீழ்த்தினார். 

 இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது. டெல்லி  கேப்பிட்டல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி அரசின் இலவச ஆன்மிக சுற்றுலா திட்டம் - அயோத்தியை சேர்க்க ஒப்புதல்
டெல்லி அரசின் இலவச ஆன்மிக சுற்றுலா திட்டத்தில் அயோத்தியையும் சேர்த்துக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2. டெல்லியில் நவ.1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு...!
டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3. டெல்லியில் மேலும் 41- பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லி: அடுக்குமாடி வீட்டில் தீ விபத்து - 4 பேர் பலி
டெல்லியில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
5. டெல்லியில் மேலும் 27- பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.