கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் ராஜினாமா + "||" + Wasim Khan Resigns as Pakistan Cricket Board CEO

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் ராஜினாமா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் ராஜினாமா
வாசிம் கான் கடந்த 2019ல் இசான் மணியால் இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த இசான் மணியின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை புரவலரும், அந்த நாட்டின் பிரதமருமான இம்ரான் கான் விரும்பவில்லை. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய தலைவராக  ரமீஸ் ராஜாவை பிரதமர் இம்ரான் கான் நியமித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் இசான் மணியால் கிரிக்கெட் அணி தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். இவர் கடந்த 2019ல்  இசான் மணியால் இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

வாசிம் 2019லிருந்து 3 ஆண்டுகளுக்கு தலைமை செயல் அதிகாரி  பொறுப்பில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைகிறது. இந்த நிலையில், தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து வாரியத்தின் தலைவரான ரமீஸ் ராஜா புதிய செயல் அதிகாரியை விரைவில் நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானின் புதிய ஹீரோவான முகமது ரிஸ்வான்....! எப்படி...?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்துக்கு 2 நாட்கள் முன்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் முகமது ரிஸ்வான்.
2. இனவெறி குற்றச்சாட்டு: பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட மைக்கேல் வாகன்
2 வீரர்கள் கொடுத்த இனவெறி குற்றச்சாட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
3. "மீண்டும் வருவேன் " அதிரடி அறிவிப்பை வெளியிட்ட யுவராஜ் சிங்...!
40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒரு நாள் போட்டி மற்றும் 58 இருபது ஓவர் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள யுவராஜ் சிங் , ஒரு நாள் போட்டிகளில் 14 சதங்களை விளாசியுள்ளார்.
4. 20 ஓவர் உலக கோப்பை:பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தினால் பிளாங்க் "செக்" ரெடி - ரமீஸ் ராஜா
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செனட் நிலைக்குழுவுடனான சந்திப்பில் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா கலந்து கொண்டார்.
5. மைதானத்தில் காதலை சொன்ன சென்னை அணி வீரர்...? யார் இந்த ஜெயா பரத்வாஜ் ...?
தீபக் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெயாவை தனது இந்திய அணியினர் மற்றும் சென்னை அணியினருக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.