இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து


இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து
x
தினத்தந்தி 30 Sep 2021 12:46 PM GMT (Updated: 30 Sep 2021 12:46 PM GMT)

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராரா ஓவலில் இன்று தொடங்கியது .

ஓவல் (ஆஸ்திரேலியா )

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் கராரா ஓவலில் இன்று தொடங்கியது .

 டாஸ்  வென்ற   ஆஸ்திரேலியாவின் கேப்டன் மெக் லானிங்  பந்துவீச்சை   தேர்வு செய்தார் .அதன் படி முதலில் களம்  இறங்கிய  இந்திய அணியின்  மந்தனா மற்றும் ஷபாலி வர்மா சிறப்பான தொடக்கம் அமைத்தனர் . அணியின் ஸ்கோர்  93 ரன்னாக இருந்த போது  ஷபாலி வர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்தார் . 

இந்திய அணி  44.1 ஓவர்களில் 132 ரன்னில்  இருந்த போது  மழையால் ஆட்டம் பாதிக்கபட்டது . இதனால் முதல் நாள் ஆட்டம் பாதியிலே ரத்து செய்யப்பட்டுள்ளது .

இந்திய அணியின் சார்பில்  சிறப்பாக விளையாடிய மந்தனா அரைசதம் அடித்து  80 ரன்களிலும், பூனம் ரவுத் 16 ரன்களிலும் களத்தில்  இருந்தனர் .

Next Story