கிரிக்கெட்

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டமும் மழையால் ரத்து + "||" + India and Australia women's teams day-night Test affected by the rain on the second day

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டமும் மழையால் ரத்து

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டமும் மழையால் ரத்து
இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டு பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது .

ஓவல் (ஆஸ்திரேலியா )

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட்  .2 வது  நாள்  ஆட்டமும்  மழையால் பாதிக்கப்பட்டு பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது .

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் கராரா ஓவலில்  நேற்று தொடங்கியது .

நேற்றைய நாளில் இந்திய அணி 44.1 ஓவர்களில் 132 ரன்னில் இருந்த போது, மழையால் ஆட்டம் பாதிக்கபட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம் பாதியிலே ரத்து செய்யப்பட்டது. இந்திய வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா 80 ரன்களுடனும், பூனம் ரவுத் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இந்நிலையில்  இன்று தொடங்கிய 2-வது நாள் ஆட்டத்தில் , தனது சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்த ஸ்மிரிதி மந்தனா, 170 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 216 பந்துகளில், 22 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 127 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

 இந்திய அணி 101.5 வர்களில்  5 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள்  எடுத்திருந்த போது   மழையால் ஆட்டம் பாதிக்கபட்டது. இதனால் 2-வது நாள் ஆட்டம் பாதியிலே ரத்து செய்யப்பட்டது. இந்திய வீராங்கனைகள்  தீப்தி ஷர்மா 12 ரன்களுடனும் , தானியா பாட்டியா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் களத்தில்  இருந்தனர் .
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. மண்டபம் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை
மண்டபம் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
2. இந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 8,309 பேருக்கு தொற்று
இந்தியாவில் மேலும் 8,309 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. பலி எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது.
3. உடையார்பாளையம் பகுதியில் மழை
உடையார்பாளையம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது.
4. பாம்பன், மண்டபத்தில் ஒரே நாள் இரவில் 13 செ.மீ. மழை
பாம்பன் மண்டபத்தில் ஒரே நாள் இரவில் 13 செமீ மழை பெய்தது. சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் 2 விசைப்படகுகள் கடலில் மூழ்கின.
5. நான்காம் நாள் ஆட்டம் நிறைவு: நியூசிலாந்து வெற்றிபெற 280 ரன்கள் தேவை
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.