கிரிக்கெட்

ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு + "||" + Punjab won the toss and elect to bowl first

ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு

ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ்  வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு
கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
துபாய்,

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள  45-வது லீக் ஆட்டத்தில் மோர்கன் தலைமையிலான  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கே.எல் ராகுல்  தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப்  அணியின் கேப்டன்  
கே.எல் ராகுல்  முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து,  கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

கடைசி 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது. 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 6 தோல்வி) உள்ள கொல்கத்தா அணி எஞ்சிய 3 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வி என 8 புள்ளியுடன் 6-வது இடம் வகிக்கிறது. அந்த அணி மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, சில அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் மட்டுமே ‘பிளே-ஆப் ’ சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். 

அதனால் இரு அணிகளுக்கும்  இது வாழ்வா-சாவா மோதல் தான். 

பஞ்சாப் அணியில் மாற்றங்களாக மயங்க் அகர்வால், பேபியன் ஆலன், ஷாருக் கான் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா அணியில் மாற்றங்களாக டிம் செய்ப்பர்ட், ஷிவம் மாவி சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொல்கத்தாவில் தசரா பண்டிகை கோலாகலம்; புர்ஜ் காலிபா வடிவமைப்பில் அலங்காரம்
கொல்கத்தாவில் தசரா பண்டிகையை ஒட்டி புர்ஜ் காலிபா போன்ற வடிவமைப்பில் பந்தல் அலங்காரம் அமைக்கப்பட்டது.
2. நிலக்கரி தட்டுப்பாடு: பஞ்சாபில் மின் தடை
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு 116 ரன்கள் வெற்றி இலக்கு
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. எனது இறுதி மூச்சு உள்ள வரை உண்மைக்காக போராடுவேன்-நவ்ஜோத் சிங் சித்து
எனது இறுதி மூச்சு உள்ள வரை உண்மைக்காக போராடுவேன் என நவ்ஜோத் சிங் சித்து டுவிட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார்.
5. பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிராக மும்பை அணி வெற்றி பெற 136 ரன்கள் இலக்கு
இன்று நடைபெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற 170 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.