கிரிக்கெட்

போட்டியை முடித்து வைக்கவே எனக்கு சம்பளம் தருகிறார்கள்-ஹெட்மையர் + "||" + i am paid to finish games for my side says dc batter hetmyer.

போட்டியை முடித்து வைக்கவே எனக்கு சம்பளம் தருகிறார்கள்-ஹெட்மையர்

போட்டியை முடித்து வைக்கவே எனக்கு சம்பளம் தருகிறார்கள்-ஹெட்மையர்
போட்டியை கடைசி வரை நின்று வெற்றிகரமாக முடித்து வைப்பதற்காகத் தான் நான் சம்பளம் வாங்குகிறேன் என்று கூறியுள்ளார்.
துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து ஐ.பி.எல். தொடரின் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. டெல்லி அணிக்காக விளையாடி வரும் ஷிம்ரோன் ஹெட்மையர் நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் 18 பந்துகளில்  28 ரன்கள் எடுத்து டெல்லி அணியை வெற்றி பெறச் செய்தார்.

நேற்றைய போட்டியில் வெற்றி அடைந்த பின் அவர் அளித்த பேட்டியில், “போட்டியை கடைசி வரை நின்று  வெற்றிகரமாக முடித்து வைக்க வேண்டும், இதற்காக தான் எனக்கு சம்பளம் தருகிறார்கள். முடிந்தவரை அணியை வெற்றி பெற வைக்க முயற்சி செய்கிறேன். நான் அடித்த பந்தை கேட்ச் பிடிக்காமல் விட்டதற்கு நன்றி. பந்தை பேட்டிற்கு நன்கு வரவிட்டு அடிக்க வேண்டும். 19-வது ஓவர் மிக முக்கியமானதாக அமைந்தது. அந்த ஓவரில் சிக்சர் அடிக்க முயற்சி செய்தேன். பிராவோவுக்கு எதிராக அதிக பந்துகளை சி.பி.எல் லீக் தொடரில் சந்தித்தது இந்த போட்டியில் உதவிகரமாக இருந்தது”. இவ்வாறு கூறினார்.  

டெல்லி அணி அடுத்த போட்டியில் பெங்களூரு அணியை துபாயில் வைத்து எதிர்கொள்கிறது.  


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை அணிக்காக முதல் வீரராக டோனி தக்கவைப்பு
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணிக்காக டோனி முதல் வீரராக தக்கவைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
2. 4-வது முறையாக கோப்பையை வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 4-வது முறையாக கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் சென்னை அணி நாளை இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை எதிர்த்து களம் காணுகிறது.
3. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது? 2-வது தகுதி சுற்றில் டெல்லி-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் டெல்லி-கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணி வெற்றி; பெங்களூரு அணி வெளியேற்றம்
ஐ.பி.எல். தொடரின் முதலாவது எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை
ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.