கிரிக்கெட்

தனது கடைசி போட்டி சென்னை மைதானத்தில் நடைபெற வேண்டும்: டோனி விருப்பம் + "||" + MS Dhoni Drops Major Hint On Retirement From IPL; Wants To Play Farewell Match In Chennai

தனது கடைசி போட்டி சென்னை மைதானத்தில் நடைபெற வேண்டும்: டோனி விருப்பம்

தனது கடைசி போட்டி சென்னை மைதானத்தில் நடைபெற வேண்டும்: டோனி விருப்பம்
தன்னுடைய கடைசி ஐ.பி.எல். போட்டியானது சென்னையில் நடைபெற வேண்டும் என டோனி விருப்பம் தெரிவித்துள்ளார்.
துபாய்,

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி  நேற்று ஆன்லைன் வாயிலாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துரையாடினார். ரசிகர்களிடம் கலந்துரையாடியபோது தனது ஓய்வு முடிவை பற்றி  மனம் திறந்தார்.  தன்னுடைய பிரிவு உபசார போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சென்னை மைதானத்தில் ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெற வேண்டும் என  தனது விருப்பத்தை தெரிவித்தார்.  அந்த வாய்ப்பு தனக்கு கிட்டும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் அவர் ஐ.பி.எல்.லின் மற்றொரு சீசனில் விளையாடுவார் என்று தெரிகிறது.

அடுத்த ஆண்டு  நடைபெறும் ஐ.பி.எல். தொடரானது மெகா ஏலத்தின் மூலம் அணியிலுள்ள வீரர்கள் அனைவரும் மாற்றியமைக்கப்படுவார்கள். இத்தகைய சூழலில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிராட் ஹாக், டேல் ஸ்டெய்ன் மற்றும் பலர் நடப்பு ஐ.பி.எல். தொடரே  தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :