கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள்! ரோகித் சர்மா சாதனை! + "||" + Rohit Sharma hits 400 sixes in T20 cricket

டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள்! ரோகித் சர்மா சாதனை!

டி20 கிரிக்கெட்டில் 400  சிக்சர்கள்! ரோகித் சர்மா சாதனை!
டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோகித் சர்மா .
ஷார்ஜா 

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்  நேற்று மோதின.  இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சு தேர்வு செய்தார்.

அதன் படி முதலில் களம்  இறங்கிய  ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதையடுத்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  விளையாடிய மும்பை அணி 8.2 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  மும்பை அணி வெற்றி பெற்றது .

மும்பை அணியில் அதிகபட்சமாக  இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து (50)  ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா  (22) ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் ரோஹித் சர்மா  ஒரு சிக்ஸ்  அடித்தார் .இந்த சிக்சினால் 20 ஓவர் கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள்  அடித்த முதல் இந்திய வீரர்  என்ற சாதனையை படைத்தார் .
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. மைதானத்தில் ரோகித் சர்மாவின் கால்களைத் தொட முயன்ற ரசிகர்..!
ராஞ்சியில் நடந்த 2வது டி20 போட்டியில், பாதுகாப்பை மீறிய ரசிகர், ரோகித் சர்மாவின் கால்களைத் தொட முயன்றார்.
2. டி20 உலகக்கோப்பை; பட்லர் அதிரடி சதம், இங்கிலாந்து 163 ரன்கள் குவிப்பு!
டி20 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 164 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
3. டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
4. 45 பந்துகளில் அரைசதம் கேப்டன் விராட் கோலி;இந்தியா 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள்
பாகிஸ்தானுக்கு எதிரான ‘சூப்பர் 12’ சுற்றில் விராட் கோலி அரைசதத்தைக் கடந்து விளையாடி வருகிறார்.
5. இந்திய அணியில் 6-வது பந்து வீச்சாளர் அவசியம் ரோகித் சர்மா கருத்து
ஹர்திக் பாண்ட்யா தயாராகி விடுவார்: இந்திய அணியில் 6-வது பந்து வீச்சாளர் அவசியம் ரோகித் சர்மா கருத்து.