ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணி முதலாவதாக பேட்டிங்


ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணி முதலாவதாக பேட்டிங்
x
தினத்தந்தி 7 Oct 2021 2:13 PM GMT (Updated: 7 Oct 2021 2:13 PM GMT)

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

சார்ஜா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 54-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது. இதில் 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ள கொல்கத்தா அணி இன்றைய ஆட்டத்தில் ஓரளவு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றை எட்டி விடலாம் என்ற நிலையில் இருக்கிறது.

அதே சமயம் 10 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் இமாலய வெற்றியை ருசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்போது முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் வருமாறு;-

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, இயன் மோர்கன், தினேஷ் கார்த்திக், ஷகிப் அல் ஹசன், சுனில் நரேன், லோக்கி பெர்குசன், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி

ராஜஸ்தான் ராயல்ஸ் - ஜெய்ஸ்வால், லியாம் லிவிங்ஸ்டன், சஞ்சு சாம்சன், கிளென் பிலிப்ஸ், அனுஜ் ராவத், சிவம் துபே, கிறிஸ் மோரிஸ், ராகுல் திவாட்டியா, சேத்தன் சகாரியா, ஜெய்தேவ் உனட்கட், முஸ்தாபிஜூர் ரஹ்மான்

Next Story