கிரிக்கெட்

பென் ஸ்டோக்ஸ் விரலில் ஆபரேஷன்: ஆஷஸ் தொடரில் பங்கேற்பது சந்தேகம்! + "||" + Ben Stokes undergoes second surgery on injured finger, set to miss Ashes

பென் ஸ்டோக்ஸ் விரலில் ஆபரேஷன்: ஆஷஸ் தொடரில் பங்கேற்பது சந்தேகம்!

பென் ஸ்டோக்ஸ் விரலில் ஆபரேஷன்: ஆஷஸ் தொடரில் பங்கேற்பது சந்தேகம்!
பென் ஸ்டோக்ஸ் விரலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால் ஆஷஸ் தொடரை இழக்க நேரிடும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரர்களுள் ஒருவர் பென் ஸ்டோக்ஸ். கடந்த 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி முதன் முறையாக உலகக்கோப்பையை வென்றதில் இவரின் பங்கு மிக முக்கியமானதாக அமைந்தது. இவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய போது அவரது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தனது காயத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

 தற்போது இரண்டாவது முறையாக விரலில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். இதனால் அவர் வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஆஷஸ் தொடரில் பங்கேற்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக  இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. புகழ்பெற்ற ஆஷஸ் தொடரானது டிசம்பர் 8 அன்று பிரிஸ்பேனில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பென் ஸ்டோக்ஸ் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த ஆஷஸ் போட்டியின் போது தோற்கும் நிலையில் இருந்த தனது அணியை போராடி  ஆட்டமிழக்காமல் 135 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தார். காயம் காரணமாக ஏற்கனவே அவர் இருபதுஓவர் உலகக்கோப்பை போட்டியில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. டி20 இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்? பென் ஸ்டோக்ஸ் கணிப்பு!
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மோதப்போகும் இரண்டு அணிகளை பென் ஸ்டோக்ஸ் கணித்துள்ளார்.
2. ஆஷஸ் கிரிக்கெட் தொடர்: மெல்போர்னில் 80,000 ரசிகர்களுக்கு அனுமதி!
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியில் 80,000 ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
3. பெடரருக்கு மீண்டும் ஆபரேஷன்
முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) கடந்த ஆண்டு கால்முட்டியில் ஏற்பட்ட காயத்துக்கு இரண்டு முறை ஆபரேஷன் செய்தார்.