கிரிக்கெட்

மைதானத்தில் காதலை சொன்ன சென்னை அணி வீரர்...? யார் இந்த ஜெயா பரத்வாஜ் ...? + "||" + Who is Jaya Bhardwaj? All you need to know about Deepak Chahar's girl

மைதானத்தில் காதலை சொன்ன சென்னை அணி வீரர்...? யார் இந்த ஜெயா பரத்வாஜ் ...?

மைதானத்தில் காதலை சொன்ன சென்னை அணி வீரர்...? யார் இந்த ஜெயா பரத்வாஜ் ...?
தீபக் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெயாவை தனது இந்திய அணியினர் மற்றும் சென்னை அணியினருக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.
துபாய்:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற  ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 98 ரன்கள் விளாசினார்.

இந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தாலும், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஒரு  நிகழ்ச்சி நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாஹர், தனது காதலிக்கு மோதிரம் அணிவித்து, காதலை வெளிப்படுத்தினார். அப்போது டோனியின் மனைவி சாக்சி மற்றும் உடனிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, வாழ்த்து தெரிவித்தனர். 

சாஹர் தனது காதலிக்கு மோதிரம் அணிவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தீபக் சாஹருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தீபக் சாஹர் இந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி, 48 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சித்தார்த் பரத்வாஜின் தங்கை ஜெயா பரத்வாஜ் ஆவார். ஜெயா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 இன் இரண்டாம் கட்டத்திற்காக சாஹருடன் துபாய்க்கு சென்றிருந்தார். ஜெயா டெல்லியைச் சேர்ந்தவர் மற்றும் ஒரு நிறுவன நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சென்னை  போட்டிகளின் போது ஜெயா அடிக்கடி  தென்படுவார்.

தீபக் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெயாவை தனது இந்திய அணியினர் மற்றும் சென்னை அணியினருக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.

இருவரும் நீண்ட காலமாக காதலித்து  வருவதாகவும் ஆனால் அவர்களின்  காதலை மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த ஜோடி ஒருபோதும் பொதுவெளியில்  ஒன்றாக தோன்றியது இல்லை.தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானின் புதிய ஹீரோவான முகமது ரிஸ்வான்....! எப்படி...?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்துக்கு 2 நாட்கள் முன்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் முகமது ரிஸ்வான்.
2. இனவெறி குற்றச்சாட்டு: பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட மைக்கேல் வாகன்
2 வீரர்கள் கொடுத்த இனவெறி குற்றச்சாட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
3. "மீண்டும் வருவேன் " அதிரடி அறிவிப்பை வெளியிட்ட யுவராஜ் சிங்...!
40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒரு நாள் போட்டி மற்றும் 58 இருபது ஓவர் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள யுவராஜ் சிங் , ஒரு நாள் போட்டிகளில் 14 சதங்களை விளாசியுள்ளார்.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்துள்ளது.
5. 20 ஓவர் உலக கோப்பை:பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தினால் பிளாங்க் "செக்" ரெடி - ரமீஸ் ராஜா
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செனட் நிலைக்குழுவுடனான சந்திப்பில் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா கலந்து கொண்டார்.