கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை:பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தினால் பிளாங்க் "செக்" ரெடி - ரமீஸ் ராஜா + "||" + ICC T20 World Cup: "Blank Cheque Ready For PCB" If Pakistan Beat India, says Ramiz Raza

20 ஓவர் உலக கோப்பை:பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தினால் பிளாங்க் "செக்" ரெடி - ரமீஸ் ராஜா

20 ஓவர் உலக கோப்பை:பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தினால் பிளாங்க் "செக்" ரெடி - ரமீஸ் ராஜா
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செனட் நிலைக்குழுவுடனான சந்திப்பில் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா கலந்து கொண்டார்.
இஸ்லாமாபாத்

வர இருக்கும் 20 ஓவர்  உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு  பணம் நிரப்பப்படாத  காசோலை பிளாங் "செக்"  கிடைக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பா ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில்  நடைபெறுகிறது. 

ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு முதல்முறையாக சந்திக்க இருக்கின்றன.  ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 24ம் தேதி துபாயில்  நடைபெறுகிறது .

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய  செனட் நிலைக்குழுவுடனான சந்திப்பில் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா  கலந்து கொண்டார். 

அப்போது அவர் பேசியதாவது;-

எங்கள் கிரிக்கெட் பொருளாதாரம் வலுவாக இருந்து இருந்தால், நாம் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற அணிகளால் பயன்படுத்தப்பட மாட்டோம்.

சிறந்த கிரிக்கெட் அணி மற்றும் சிறந்த கிரிக்கெட் பொருளாதாரம் இரண்டு பெரிய சவால்கள் உள்ளன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு 90 சதவீத நிதி இந்தியாவிலிருந்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்தியா நிதியளிப்பதை நிறுத்திவிட்டால்,  ஐசிசிக்கு நிதியே வழங்காத பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்   சரிந்துவிடக்கூடும் என்று நான் பயப்படுகிறேன்.

வரவிருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில்  பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தினால் பாகிஸ்தான் கிர்க்கெட் வாரியத்துக்கு   பணம் நிரப்பபடாத பிளாங் "செக்" தருவதாக  ஒரு வலுவான முதலீட்டாளர் என்னிடம் கூறி உள்ளார் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானின் புதிய ஹீரோவான முகமது ரிஸ்வான்....! எப்படி...?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்துக்கு 2 நாட்கள் முன்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் முகமது ரிஸ்வான்.
2. இனவெறி குற்றச்சாட்டு: பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட மைக்கேல் வாகன்
2 வீரர்கள் கொடுத்த இனவெறி குற்றச்சாட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
3. "மீண்டும் வருவேன் " அதிரடி அறிவிப்பை வெளியிட்ட யுவராஜ் சிங்...!
40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒரு நாள் போட்டி மற்றும் 58 இருபது ஓவர் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள யுவராஜ் சிங் , ஒரு நாள் போட்டிகளில் 14 சதங்களை விளாசியுள்ளார்.
4. மைதானத்தில் காதலை சொன்ன சென்னை அணி வீரர்...? யார் இந்த ஜெயா பரத்வாஜ் ...?
தீபக் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெயாவை தனது இந்திய அணியினர் மற்றும் சென்னை அணியினருக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.
5. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் ராஜினாமா
வாசிம் கான் கடந்த 2019ல் இசான் மணியால் இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.