கிரிக்கெட்

ருத்ரதாண்டவம் ஆடிய மும்பை: ஐதராபாத் அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது + "||" + Suryakumar fights on with 24-ball fifty

ருத்ரதாண்டவம் ஆடிய மும்பை: ஐதராபாத் அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது

ருத்ரதாண்டவம் ஆடிய மும்பை:  ஐதராபாத் அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 235-ரன்கள் எடுத்துள்ளது.
அபுதாபி,

14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 55-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐதரபாத் அணியும் மோதின.  இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் எனில் 171 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. 

இதனால், மும்பை அணி பேட்ஸ்மேன்கள் முதல் ஓவரில் இருந்தே அதிரடி காட்டத்தொடங்கினார். குறிப்பாக இஷான் கிஷான் அபாரமாக ஆடினார். அவரது பேட்டில் பட்ட பந்துகள் பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறந்தன. இதனால், ஜெட் வேகத்தில் ரன் வேகம் இருந்தது. 

விக்கெட்டுகள் விழுந்தாலும் மும்பை அணி அதிரடியை குறைக்கவில்லை.  மும்பை அணி ஆடிய விதத்தை பார்க்கும் போது ஹைலட்ஸ் பார்ப்பது போல இருந்தது.  மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில்  9 விக்கெட் இழப்புக்கு 235  ரன்கள் குவித்தது.  மும்பை அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 32 பந்துகளில் 84 ரன்கள் அடித்தார். சூர்ய குமார் யாதவ் 40 பந்துகளில் 82 ரன்கள் அடித்தார். இதையடுத்து 236-என்ற இலக்குடன் ஐதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. மும்பைக்கு அதிர்ச்சி அளிக்குமா ஐதராபாத்?
கொல்கத்தா அணி ராஜஸ்தானை புரட்டியெடுத்ததன் மூலம் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது.
2. ஐ.பி.எல்.: ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை அணி வெற்றி பெற 135 ரன்கள் இலக்கு
இன்று நடைபெற்று வரும் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற 135 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. சரிவில் இருந்து மீளுமா மும்பை?
ரோகித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.
4. சஞ்சு சாம்சன் அதிரடி: ஐதராபாத்துக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு
ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற 165 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5. ஐபிஎல்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.