கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி + "||" + IPL Cricket Delhi set a Target of 165 for Bengaluru

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 164 ரன்கள் குவித்துள்ளது.
துபாய்,

14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ப்ரித்வீ ஷா மற்றும் ஷிகர் தவான் இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். ப்ரித்வீ ஷா 31 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களை விளாசி 48 ரன்கள் எடுத்த நிலையில், சாஹல் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். மறுபுறம் ஷிகர் தவான், 3 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 43 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து வந்தவர்களில் ஹெட்மேயர் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரிஷப் பண்ட் 10 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 18 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்தது. முகமது சிராஜ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இது தவிர சாஹல், ஹர்ஷல் பட்டேல், டேனியல் கிறிஸ்டியன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி தற்போது விளையாடி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் 2021- சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தாவை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்; 4-வது முறையாக கோப்பையை வென்றது சென்னை
ஐ.பி.எல். இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சென்னை அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா
இன்று நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்துள்ளது.
5. மூத்த கன்னட நடிகர் சத்யஜித் மறைவு; திரையுலகினர் இரங்கல்
புகழ் பெற்ற கன்னட நடிகர் சத்யஜித் இன்று பெங்களூருவில் வைத்து காலமானார்.