கிரிக்கெட்

இது போன்ற வெற்றி எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது - விராட் கோலி + "||" + Win like this will give us confidence to pull off game from any situation: Kohli

இது போன்ற வெற்றி எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது - விராட் கோலி

இது போன்ற வெற்றி எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது - விராட் கோலி
எந்த சூழ்நிலையிலும் போட்டியை எங்கள் பக்கம் திரும்பலாம் என்ற நம்பிக்கையை இது போன்ற வெற்றி அளிப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
அபுதாபி,

ஐபிஎல் கிரிக்கெட்டின் லீக் சுற்றுகள் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. சிறப்பாக  ஆடிய ஸ்ரீகர் பரத் கடைசி பந்தில் சிக்சர் அடித்து பெங்களூரு வெற்றிக்கு வழிவகுத்தார். பரத் 78 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இந்த போட்டியின் வெற்றிக்கு பின்னர் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், நம்பமுடியாத விளையாட்டு. எங்களுக்கு இழக்க எதுவும் இல்லை. இது மிகவும் போட்டி நிறைந்த விளையாட்டு. ஐபிஎல் என்றாலே அதுதான். எந்த சூழ்நிலையிலும் போட்டியை எங்கள் பக்கம் திருப்பலாம் என்ற நம்பிக்கையை இந்த வெற்றி எங்களுக்கு அளிக்கிறது’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட் : 2 புதிய அணிகள் அறிவிப்பு
அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
2. ஐபிஎல் கோப்பை யாருக்கு? இறுதிப்போட்டியில் சென்னை- கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை
14-வது ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை உச்சிமுகரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. ஐபிஎல் 2-வது தகுதி சுற்று: கொல்கத்தாவுக்கு 136 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 135 ரன்கள் சேர்த்துள்ளது.
4. ஐபிஎல் 2-வது தகுதி சுற்று ஆட்டம்: கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
5. ஐ.பி.எல்: வெளியேற்றுதல் சுற்று ஆட்டம்- பெங்களூரு அணி முதலில் பேட்டிங்
ஐபிஎல் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.