கிரிக்கெட்

20 ஓவர் உலகக் கோப்பை: டோனியின் முடிவு என்ன ! + "||" + t20 world cup eyes on mentor dhoni as team india look to solve hardik varun puzzle.

20 ஓவர் உலகக் கோப்பை: டோனியின் முடிவு என்ன !

20 ஓவர் உலகக் கோப்பை: டோனியின் முடிவு என்ன !
20 ஓவர் உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோரின் விளையாடும் வாய்ப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
புது டெல்லி,

20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோரின் விளையாடும் வாய்ப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. வருண் சக்ரவர்த்தியின் உடற்தகுதி ஒரு பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. பாண்டியா பந்துவீச மாட்டார் என்பதால் அவர் ஒரு பேட்ஸ்மேனாக  மட்டுமே ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 ஓவர்கள் மட்டுமே பந்துவீச வேண்டும் என்பதால் வருண் சக்ரவர்த்தியின் உடற்தகுதி ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆல்ரவுண்டர் இடத்துக்கான போட்டியில் ஜடேஜா மற்றும் பாண்டியா உள்ளனர். ஜடேஜா சமீப காலமாக நன்றாக பேட்டிங் செய்து வருவதால் அவர் விளையாடும் லெவனில் இருக்கும் வாய்ப்பு அதிகம்.இதனால் பாண்டியாவை ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் ஆட வைக்க வேண்டிய நிலை கோலிக்கு உருவாகி உள்ளது.ஒரு நல்ல மேட்ச் வின்னராக  பாண்டியா செயல்படுவார் என்னும் பார்வையில் அவர் அணியில் சேர்க்கப்படலாம்.

பாண்டியா  அறுவை சிகிச்சைக்கு பின் இன்னும் பந்துவீச முழுமையாக தயாராகவில்லை. தற்போது ஐ.பி.எல். தொடர் நடைபெற்று வருவதால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிசியோவின் கீழ்  அவர் பயிற்சியில் உள்ளார். விரைவில் இந்திய அணியின் பிசியோவுடன் இணைந்து பணியாற்றுவார். அப்போது தான் அவருடைய உடற்தகுதியை கண்காணித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தற்போது  முன்னாள் கேப்டன் டோனி, 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதால் அவருடைய பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படும். அவர் கேப்டன் கோலி, ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருடன் கலந்து ஆலோசித்து வருண் சக்ரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் குறித்த தனது முடிவை அறிவிப்பார். எனவே, அனைவரது பார்வையும் டோனியின் மீது திரும்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் டோனி ...வீடியோ வெளியிட்ட அணி நிர்வாகம்
சென்னை வீரர்கள் தாங்கள் தக்கவைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வீடியோ ஒன்றை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
2. டோனி பார்த்து ரசித்த கடைசி பந்து சிக்சர்..!
சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி விளையாடும் கடைசி ஓவரை எம்.எஸ்.டோனி பார்த்து ரசித்துள்ளார்.
3. தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், டோனி மஞ்சள் தமிழர் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதல்வராக வரவில்லை... தோனியின் ரசிகராக வந்துள்ளேன் என சி.எஸ்.கே. அணியின் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
4. சென்னை மிகச்சிறந்த நினைவுகளை தந்துள்ளது: டோனி நெகிழ்ச்சி
சென்னையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியின் போதும் ரசிகர்கள் ஆதரவு மிகப்பெரியது என டோனி பேசினார்.
5. வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது- டோனியின் பணி குறித்து கவாஸ்கர் கருத்து
வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என டோனியின் பணி குறித்து கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.