கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி + "||" + IPL Cricket Delhi set a target of 173 for Chennai

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்துள்ளது.
துபாய்,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று நேற்று முன்தினம் நிறைவடைந்தது. புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் வெளியேறின.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து 7.30 மணிக்கு தொடங்கு ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வீஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இதில் ஷிகர் தவான் 7 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் வெளியேறினார். அக்சர் பட்டேல் 10 ரன்களில் கேட்ச் ஆனார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் ப்ரித்வீஷா நிதானமாக ஆடி அரைசதத்தைக் கடந்தார். இதையடுத்து 60 ரன்களில் அவர் அவுட் ஆனார்.

அடுத்ததாக வந்த ரிஷப் பண்ட்-ஹெட்மேயர் ஜோடி அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரிஷப் பண்ட் இறுதி வரை நிலைத்து நின்று ஆடி 35 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். கடைசியாக டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. இதையடுத்து 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி தற்போது விளையாடி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் 2021- சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தாவை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்; 4-வது முறையாக கோப்பையை வென்றது சென்னை
ஐ.பி.எல். இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சென்னை அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா
இன்று நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 164 ரன்கள் குவித்துள்ளது.
5. மைதானத்தில் காதலை சொன்ன சென்னை அணி வீரர்...? யார் இந்த ஜெயா பரத்வாஜ் ...?
தீபக் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெயாவை தனது இந்திய அணியினர் மற்றும் சென்னை அணியினருக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.