கிரிக்கெட்

ஹர்திக் பாண்டியா பந்து வீசுவாரா? டி 20 அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளரை சேர்க்க ஆலோசனை + "||" + Will Hardik Pandya bowl in T20 World Cup? Talks on to include additional fast bowler in squad by October 15

ஹர்திக் பாண்டியா பந்து வீசுவாரா? டி 20 அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளரை சேர்க்க ஆலோசனை

ஹர்திக் பாண்டியா பந்து வீசுவாரா? டி 20 அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளரை சேர்க்க ஆலோசனை
டி 20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா பந்து வீசுவது இன்னும் முடிவாகாத நிலையில் அக்டோபர் 15 க்குள் அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளரை சேர்க்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.
துபாய்,

டி 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் வருகிற 17-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா தனது முதல் போட்டியில் வரும் 24-ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த நிலையில்  டி 20  ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முதுகுவலி பிரச்சினையால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் கூட பந்து வீசவில்லை.  

அவரையும் சேர்த்து இந்திய அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். பாண்ட்யாவால் பந்து வீச இயலாத பட்சத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் பற்றாக்குறையாகி விடும் நிலைமை உள்ளது. 

இந்திய அணி உலக கோப்பை போட்டியில் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் ஆடுவதால், அணியில் மாற்றம் செய்ய வருகிற 15-ந்தேதி வரை அவகாசம் உண்டு என்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அணியில் மாற்றம் செய்வது குறித்து சேத்தன் சர்மா தலைமையிலான பிசிசிஐ தேர்வுக் குழு, இந்திய உலகக் கோப்பை அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளரைச் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. தீபக் சாஹர் அல்லது ஷர்துல் தாக்குர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா போன்ற பெரிய அணிகளுடன் மோதுவதை விரும்புகிறோம்- நமீபியா
டி20 உலகக் கோப்பையில் இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக போட்டியிடுவதை விரும்புவதாக நமீபிய பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
2. 20 ஓவர் உலகக் கோப்பை : நெட் பவுலராக வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கான் தேர்வு
இந்திய அணியின் நெட் பவுலராக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 21 வயதான உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்பட்டு இருந்த நிலையில் அவேஷ் கானும் அதில் இணைந்துள்ளார்.