கிரிக்கெட்

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் டோனியே சிறந்தவர்: ரிக்கி பாண்டிங் + "||" + IPL 2021: MS Dhoni is One of the Great Finishers of the Game, Says DC Coach Ricky Ponting

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் டோனியே சிறந்தவர்: ரிக்கி பாண்டிங்

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் டோனியே சிறந்தவர்: ரிக்கி பாண்டிங்
கடைசி நேரத்தில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதில் டோனியே சிறந்தவர் என ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
துபாய்,

டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு எதிரான நேற்றய ஆட்டத்தில் தன்னுடைய  சிறப்பான பேட்டிங் மூலம் அணியை வெற்றி பெறச்செய்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் டோனி. ஐ.பி.எல் குவாலிபையர் முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 172 ரன்கள் சேர்த்தது. சேஸிங்கில் 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய டோனி, 1 சிக்ஸர், 3 பவுண்டரி உள்பட 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னையின் வெற்றியை உறுதி செய்தார்.

 இதன்மூலம், 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ். இதையடுத்து, சமூக ஊடகங்களில் பாராட்டு மழையில் நனையத் தொடங்கினார் டோனி. 


இதுகுறித்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில், கடைசி நேரத்தில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதில் டோனியே சிறந்தவர் என கருதுகிறேன். 

ஏனெனில் ஆட்டத்தில் கடைசி நேரத்தில் பேட்ஸ்மேன்கள் அனைவருக்கும் மன அழுத்தம் தொற்றிக்கொள்ளும். ஆனால் டோனியோ எவ்வித அழுத்தம் இன்றி தனது அணிக்கு வெற்றியை கொடுத்துள்ளார். அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும், அவரது கடைசி நேர பேட்டிங் திறமை நிச்சயம் நினைவுகூறப்படும் என்று கூறினார்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் டோனி ...வீடியோ வெளியிட்ட அணி நிர்வாகம்
சென்னை வீரர்கள் தாங்கள் தக்கவைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வீடியோ ஒன்றை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
2. டோனி பார்த்து ரசித்த கடைசி பந்து சிக்சர்..!
சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி விளையாடும் கடைசி ஓவரை எம்.எஸ்.டோனி பார்த்து ரசித்துள்ளார்.
3. தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், டோனி மஞ்சள் தமிழர் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதல்வராக வரவில்லை... தோனியின் ரசிகராக வந்துள்ளேன் என சி.எஸ்.கே. அணியின் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
4. சென்னை மிகச்சிறந்த நினைவுகளை தந்துள்ளது: டோனி நெகிழ்ச்சி
சென்னையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியின் போதும் ரசிகர்கள் ஆதரவு மிகப்பெரியது என டோனி பேசினார்.
5. வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது- டோனியின் பணி குறித்து கவாஸ்கர் கருத்து
வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என டோனியின் பணி குறித்து கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.