கிரிக்கெட்

ஐ.பி.எல்: வெளியேற்றுதல் சுற்று ஆட்டம்- பெங்களூரு அணி முதலில் பேட்டிங் + "||" + Unchanged RCB opt to bat

ஐ.பி.எல்: வெளியேற்றுதல் சுற்று ஆட்டம்- பெங்களூரு அணி முதலில் பேட்டிங்

ஐ.பி.எல்: வெளியேற்றுதல் சுற்று ஆட்டம்- பெங்களூரு அணி முதலில் பேட்டிங்
ஐபிஎல் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
ஷார்ஜா, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சார்ஜாவில் இன்று நடைபெறும்  வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடித்த அணிகளான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் சந்திக்கின்றன. 

இதில் தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும். வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த டெல்லி அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் மோதும்.  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதன்படி கொல்கத்தா அணி முதலில் பந்து வீச உள்ளது. 

இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்;

பெங்களூரு

விராட் கோலி (கேப்டன்)  தேவ்தத் பட்டிக்கல், ஸ்ரீகர் பாரத், கிளென் மேக்ஸ்வேல், ஏபி டி வில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஷபாஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் படேல், முகம்மது சிராஜ், யுஸ்வேந்திர சஹால்,

கொல்கத்தா:

சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக், ஷகிப் அல் ஹாசன், சுனில் நரைன், பெர்குசன், ஷிவம் மாவி, வருண் சக்ரவரத்தி


தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட் : 2 புதிய அணிகள் அறிவிப்பு
அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
2. ஐபிஎல் கோப்பை யாருக்கு? இறுதிப்போட்டியில் சென்னை- கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை
14-வது ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை உச்சிமுகரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. ஐபிஎல் 2-வது தகுதி சுற்று: கொல்கத்தாவுக்கு 136 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 135 ரன்கள் சேர்த்துள்ளது.
4. ஐபிஎல் 2-வது தகுதி சுற்று ஆட்டம்: கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
5. இது போன்ற வெற்றி எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது - விராட் கோலி
எந்த சூழ்நிலையிலும் போட்டியை எங்கள் பக்கம் திரும்பலாம் என்ற நம்பிக்கையை இது போன்ற வெற்றி அளிப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.