கிரிக்கெட்

பெண்கள் டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை : ஷபாலி வர்மா பின்னடைவு + "||" + Beth Mooney replaces Shafali Verma as No.1 in ICC T20 batting rankings

பெண்கள் டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை : ஷபாலி வர்மா பின்னடைவு

பெண்கள் டி20 கிரிக்கெட்  பேட்டிங்  தரவரிசை : ஷபாலி வர்மா பின்னடைவு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்து முடிந்த டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் 726 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் 

பெண்களுக்கான டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா முதல் இடத்தை இழந்துள்ளார் . சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்து முடிந்த டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் 726 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து  பின்னடைவை சந்தித்துள்ளார்.

அதே போல் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய  ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 754 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். மற்றோரு இந்திய வீராங்கனையான ஸ்ம்ரிதி மந்தனா 709 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

அதே போல் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லான்னிங் 698 புள்ளிகளுடன் தரவரிசையில் நாலாவது இடத்தையும் மற்றொரு ஆஸ்திரேலிய   வீராங்கனை அலிசா ஹீலி 673   புள்ளிகளுடன் தரவரிசையில் ஆறாவது இடமும் பிடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.