கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்; 4-வது முறையாக கோப்பையை வென்றது சென்னை + "||" + IPL Cricket Chennai won the trophy for the 4th time

ஐ.பி.எல். கிரிக்கெட்; 4-வது முறையாக கோப்பையை வென்றது சென்னை

ஐ.பி.எல். கிரிக்கெட்; 4-வது முறையாக கோப்பையை வென்றது சென்னை
ஐ.பி.எல். இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சென்னை அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
துபாய்,

ஐ.பி.எல். 2021 கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் இறுதி ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. இதுவரை சென்னை அணி 3 முறையும், கொல்கத்தா அணி 2 முறையும் கோப்பைகளை வென்றுள்ளன.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுபிளிசிஸ் களமிறங்கினர். இதில் ருதுராஜ் 32 ரன்களில்(3 பவுனரிகல், 1 சிக்சர்) வெளியேறினார்.  

அடுத்து வந்த ராபின் உத்தப்பா 3 சிக்சர்களை விளாசி 31 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடி காட்டிய டுபிளிசிஸ், 59 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்சர்களை பறக்கவிட்டு 86 ரன்கள் குவித்தார். 20-வது ஓவரின் கடைசி பந்தில் சிவம் மாவி வீசிய பந்தில் டுபிளிசிஸ் கேட்ச் ஆனார். மொயீன் அலி(37 ரன்கள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் சுனில் நரேன் 2 விக்கெட்டுகளும், ஷிவம் மாவி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கியது. 

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். இதில் ஷுப்மன் கில் 51 ரன்களும்,  வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களும் குவித்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனால் இவர்களுக்குப் பிறகு வந்தவர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் ஆட்டம் சென்னை அணிக்கு சாதகமாக மாறியது.

கொல்கத்தா அணியில் நிதிஷ் ரானா(0), சுனில் நரேன்(2), இயன் மார்கன்(4), தினேஷ் கார்த்திக்(9) என வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தன. இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஐ.பி.எல். 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி, சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்று பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் 2021- சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தாவை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா
இன்று நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்துள்ளது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 164 ரன்கள் குவித்துள்ளது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2-வது இடத்தை பிடிக்குமா பெங்களூரு?
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டின் கடைசி லீக்கான இந்த ஆட்டத்தின் முடிவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.