கிரிக்கெட்

ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றிய ருதுராஜ் கெய்க்வாட் + "||" + Ruturaj Gaikwad receives the orange cap

ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றிய ருதுராஜ் கெய்க்வாட்

ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றிய ருதுராஜ் கெய்க்வாட்
நேற்றையை ஐ.பி.எல். இறுதி ஆட்டத்தின் மூலம் மொத்தம் 635 ரன்களுடன் ஆரஞ்சு நிற தொப்பியை ருதுராஜ் கெய்க்வாட் வசப்படுத்தினார்.
துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படும். இறுதிப்போட்டிக்கு முன்பாக பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் (626 ரன்) முதலிடத்தில் இருந்தார். அவரை விட 24 ரன்கள் பின்தங்கி இருந்த சென்னை வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நேற்றைய இறுதி ஆட்டத்தில் அந்த ஸ்கோரை கடந்தார். அவர் 32 ரன்கள் எடுத்து மொத்தம் 635 ரன்களுடன்(ஒரு சதம், 4 அரைசதம் உள்பட) முதலிடத்தை பிடித்து ஆரஞ்சு நிற தொப்பியை வசப்படுத்தினார். 

மற்றொரு சென்னை வீரர் பாப் டு பிளிஸ்சிஸ்சும் அவரை நெருங்கி வந்து 6 அரைசதத்துடன் 633 ரன்கள் எடுத்து 2-வது இடத்தை பெற்றார். ஒரு சீசனில் ஒரே அணியை சேர்ந்த இரு வீரர்கள் 600 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 3-வது நிகழ்வாகும். ஏற்கனவே 2013-ம் ஆண்டில் பெங்களூரு அணிக்காக விராட் கோலி (634 ரன்)-கிறிஸ் கெய்ல் (708 ரன்) , 2016-ம் ஆண்டில் பெங்களூரு அணிக்காக விராட் கோலி (973 ரன்)-டிவில்லியர்ஸ் (687 ரன்) ஆகியோர் இச்சாதனையை செய்துள்ளனர்.