கிரிக்கெட்

நாங்கள் எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் ஆதரவு உண்டு: டோனி பெருமிதம் + "||" + Wherever we played the fans were supportive says Chennai team captain Dhoni

நாங்கள் எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் ஆதரவு உண்டு: டோனி பெருமிதம்

நாங்கள் எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் ஆதரவு உண்டு: டோனி பெருமிதம்
நாங்கள் துபாயில் விளையாடினாலும் சென்னையில் விளையாடியதுபோல் உணர்கிறோம் என்று கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.
துபாய்:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில்   நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது.

193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதனால்  கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.

இந்த வெற்றிக்கு பிறகு  ரசிகர்கள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு  சென்னை அணி கேப்டன் டோனி  கூறியதாவது :

நாங்கள் எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் ஆதரவாக இருந்தார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தென் ஆப்பிரிக்காவில் விளையாடியபோதும் சி.எஸ்.கே. ரசிகர்கள் திரண்டுவந்து ஆதரவு தெரிவித்தார்கள். அனைவருக்கும் நன்றி. 

நாங்கள் துபாயில் விளையாடினாலும், சென்னையில் விளையாடியதுபோல் உணர்கிறோம். சென்னை ரசிகர்களுக்காக விரைவில் சென்னை வருவோம் என்று நம்புகிறேன்.

இவ்வாறு டோனி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கிரிக்கெட்டில் மிகவும் கூர்மையான சிந்தனையாளர்களில் ஒருவர் டோனி - கிரேக் சேப்பல் கருத்து
கிரிக்கெட்டில் மிகவும் கூர்மையான சிந்தனையாளர்களில் ஒருவர் டோனி என கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.
2. தென் ஆப்பிரிக்க டெஸ்ட்; டோனியின் சாதனையை முறியடித்த ரிஷாப் பண்ட்
டோனி, விருத்திமான் சஹா தங்களது 36-வது டெஸ்டில் நிகழ்த்திய சாதனையை பண்ட் தனது 26-வது டெஸ்டில் நிகழ்த்தியுள்ளார்.
3. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் டோனி ...வீடியோ வெளியிட்ட அணி நிர்வாகம்
சென்னை வீரர்கள் தாங்கள் தக்கவைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வீடியோ ஒன்றை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
4. டோனி பார்த்து ரசித்த கடைசி பந்து சிக்சர்..!
சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி விளையாடும் கடைசி ஓவரை எம்.எஸ்.டோனி பார்த்து ரசித்துள்ளார்.
5. தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், டோனி மஞ்சள் தமிழர் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதல்வராக வரவில்லை... தோனியின் ரசிகராக வந்துள்ளேன் என சி.எஸ்.கே. அணியின் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.