கிரிக்கெட்

அடுத்த ஐபிஎல் சீசனிலும் டோனி கண்டிப்பாக விளையாட வேண்டும்: சேவாக் + "||" + Must Play Next Season": Virender Sehwag Weighs In On CSK Captain MS Dhoni's IPL Future

அடுத்த ஐபிஎல் சீசனிலும் டோனி கண்டிப்பாக விளையாட வேண்டும்: சேவாக்

அடுத்த ஐபிஎல் சீசனிலும் டோனி கண்டிப்பாக விளையாட வேண்டும்: சேவாக்
அடுத்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்பது குறித்து இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை என்று சென்னை கேப்டன் டோனி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி அடுத்த ஐபிஎல் சீசனிலும் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேவாக் கூறுகையில், 

“ டோனி 4  ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். 9 இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார். எனவே, இதற்கு இணையாக செயல்படுவது எந்த கேப்டனுக்கு மிகப்பெரிய பணியாக இருக்கும். ரோகித் சர்மா இதற்கு இணையாக உள்ளார். ஆனால், 9 இறுதிப்போட்டிகள் விளையாட வேண்டும் என்றால் அவருக்கு இன்னும் கூடுதல் காலம் எடுக்கும். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகச்சிறந்தது. டோனியின் பாரம்பரியத்தை இந்திய அணியில் உள்ள எந்த ஒரு வீரராலும் முறியடிக்க முடியாது.  சென்னை அணிக்காக டோனி கண்டிப்பாக மேலும் ஒரு சீசனில்  விளையாட வேண்டும். அதன்பிறகே டோனி தனது ஓய்வு முடிவை வெளியிட வேண்டும்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. தென் ஆப்பிரிக்க டெஸ்ட்; டோனியின் சாதனையை முறியடித்த ரிஷாப் பண்ட்
டோனி, விருத்திமான் சஹா தங்களது 36-வது டெஸ்டில் நிகழ்த்திய சாதனையை பண்ட் தனது 26-வது டெஸ்டில் நிகழ்த்தியுள்ளார்.
2. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் டோனி ...வீடியோ வெளியிட்ட அணி நிர்வாகம்
சென்னை வீரர்கள் தாங்கள் தக்கவைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வீடியோ ஒன்றை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
3. டோனி பார்த்து ரசித்த கடைசி பந்து சிக்சர்..!
சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி விளையாடும் கடைசி ஓவரை எம்.எஸ்.டோனி பார்த்து ரசித்துள்ளார்.
4. தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், டோனி மஞ்சள் தமிழர் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதல்வராக வரவில்லை... தோனியின் ரசிகராக வந்துள்ளேன் என சி.எஸ்.கே. அணியின் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
5. சென்னை மிகச்சிறந்த நினைவுகளை தந்துள்ளது: டோனி நெகிழ்ச்சி
சென்னையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியின் போதும் ரசிகர்கள் ஆதரவு மிகப்பெரியது என டோனி பேசினார்.