கிரிக்கெட்

சென்னை அணிக்காக முதல் வீரராக டோனி தக்கவைப்பு + "||" + The first retention card at the auction will be used for MS Dhoni: CSK official

சென்னை அணிக்காக முதல் வீரராக டோனி தக்கவைப்பு

சென்னை அணிக்காக முதல் வீரராக டோனி தக்கவைப்பு
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணிக்காக டோனி முதல் வீரராக தக்கவைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் புதியதாக 2 அணிகள் பங்கேற்கின்றன. இதனால் மிகப்பெரிய அளவில் ஏலம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.போட்டிகளில் விளையாடுவீர்களா என டோனியிடம் கேட்டபோது அவர், பி.சி.சி.ஐ. மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுக்கும் முடிவை பொறுத்து என்னுடைய ஐ.பி.எல்.எதிர்காலம் அமையும் என தெரிவித்தார். 

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் வீரராக டோனி தக்க வைக்கப்பட்டுள்ளார். இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இன்று அறிவித்ததுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த அறிவிப்பின் மூலம் டோனி அடுத்த ஆண்டுநடைபெற இருக்கும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என தெரியவந்துள்ளது. டோனி சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4-வது ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. இருபது ஓவர் கிரிக்கெட்: கேப்டனாக டோனி புதிய சாதனை!
இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக டோனி 300 போட்டிகளில் விளையாடி புதிய சாதனையை படைத்தார்.
2. ஐபிஎல் கோப்பை யாருக்கு? இறுதிப்போட்டியில் சென்னை- கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை
14-வது ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை உச்சிமுகரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. 4-வது முறையாக கோப்பையை வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 4-வது முறையாக கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் சென்னை அணி நாளை இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை எதிர்த்து களம் காணுகிறது.
4. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது? 2-வது தகுதி சுற்றில் டெல்லி-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் டெல்லி-கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணி வெற்றி; பெங்களூரு அணி வெளியேற்றம்
ஐ.பி.எல். தொடரின் முதலாவது எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.