கிரிக்கெட்

கோலிக்கு வெற்றியை கொடுங்கள்: இந்திய டி20 அணிக்கு சுரேஷ் ரெய்னா அறிவுரை + "||" + T20 World Cup 2021: Win it For Virat Kohli, Suresh Raina Tells Team India

கோலிக்கு வெற்றியை கொடுங்கள்: இந்திய டி20 அணிக்கு சுரேஷ் ரெய்னா அறிவுரை

கோலிக்கு வெற்றியை கொடுங்கள்: இந்திய டி20 அணிக்கு சுரேஷ் ரெய்னா அறிவுரை
20 ஓவர் உலகக்கோப்பையில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு சுரேஷ் ரெய்னா அறிவுரை கூறியுள்ளார்.
துபாய்,

16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதில் ஓமனில் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடக்கிறது. மற்ற அனைத்து ஆட்டங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் கால்பதிக்கும் நிலையில், தொடக்கத்தில் முதல் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன.

இந்திய அணியானது இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடிய பின்னர் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுடன் வருகிற 24-ஆம் தேதி மோத உள்ளது.

இந்த நிலையில் 20 ஓவர்  உலகக்கோப்பையில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு சுரேஷ் ரெய்னா அறிவுரை கூறியுள்ளார்.

அதாவது, 20 ஓவர்  உலகக்கோப்பையானது விராட் கோலி கேப்டனாக விளையாடும் கடைசி டி20 தொடராக உள்ளது. எனவே இந்திய அணி வீரர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு கேப்டன் விராட் கோலிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க வேண்டும். என இந்திய அணிக்கு சுரேஷ் ரெய்னா அறிவுரை கூறியுள்ளார்.

மேலும், தற்போதய இந்திய அணியானது மிகவும் வலுவான நிலையில் உள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சரியான கலவையுடன் இருப்பதால், எந்த அணியையும் இந்திய அணியால் வீழ்த்த முடியும். மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடி இருப்பதால் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்த 20 ஓவர்  உலகக்கோப்பை தொடருடன் விராட் கோலி, டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் உலகக்கோப்பை : அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் பாபர் அசாம் முதலிடம்
இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் அதிகபட்ச தனிநபர் ரன்களை இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் அடித்துள்ளார்
2. டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு
டி20 உலகக்கோப்பை நமிபிய அணி இந்திய அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
3. டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு
பாகிஸ்தான் அணி ஸ்காட்லாந்துக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
4. டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு
டி20 உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
5. டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.