கிரிக்கெட்

சையத் முஷ்டாக் அலி டிராபி: தினேஷ் கார்த்திக் விலகலால் விஜய் சங்கர் கேப்டன் பொறுப்பேற்பு + "||" + Syed Mushtaq Ali Trophy: Vijay Shankar to Lead Tamil Nadu as Dinesh Karthik Ruled Out

சையத் முஷ்டாக் அலி டிராபி: தினேஷ் கார்த்திக் விலகலால் விஜய் சங்கர் கேப்டன் பொறுப்பேற்பு

சையத் முஷ்டாக் அலி டிராபி: தினேஷ் கார்த்திக் விலகலால் விஜய் சங்கர் கேப்டன் பொறுப்பேற்பு
சையத் முஷ்டாக் அலி டிராபியில் தினேஷ் கார்த்திக் விலகலால் விஜய் சங்கரிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
சென்னை,

முதல்தர போட்டியான சையத் முஷ்டாக் அலி டி 20 போட்டியில் தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்திக் செயல்படுவார் என கடந்த சில நாட்களுக்கு முன்பு  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் முழங்கால் காயத்தால் அவதிப்படுவதால் போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில், கேப்டன் பொறுப்பானது விஜய் சங்கரிடம் ஒப்படைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ஆதித்யா கணேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல் இறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய போது முழங்காலில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஒமிக்ரான் வைரஸ்: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஜிம்பாவேயில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2. 3-வது டி20 : நியூசிலாந்துக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
டி20 போட்டியில் நியூசிலாந்துக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
3. டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.
4. இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து
2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து.
5. அனைத்துவித கிரிக்கெட்டிலிருந்தும் ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வு
அனைத்து வகையான கிரிக்கெட்டிலுமிருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.