கிரிக்கெட்

டி 20 உலகக்கோப்பை: வங்காளதேசம்-ஓமன் அணிகள் இன்று மோதல் + "||" + Oman vs Bangladesh Prediction: Who will win today's T20 World Cup 2021 match?

டி 20 உலகக்கோப்பை: வங்காளதேசம்-ஓமன் அணிகள் இன்று மோதல்

டி 20 உலகக்கோப்பை: வங்காளதேசம்-ஓமன் அணிகள் இன்று மோதல்
டி 20 உலகக்கோப்பையின் இன்றய ஆட்டத்தில் வங்காளதேசம்-ஓமன் அணிகள் மோதுகின்றன
மஸ்கட், 

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

 மஸ்கட்டில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் ஜீஷன் மசூத் தலைமையிலான ஓமன் அணி, மக்முதுல்லா தலைமையிலான வங்காளதேசத்துடன் மல்லுகட்டுகிறது. இந்த ஆட்டம் வங்காளதேசத்துக்கு மிகவும் முக்கியமானதாகும். பேட்டிங்கில் சொதப்பியதால் முதலாவது ஆட்டத்தில் ஸ்காட்லாந்திடம் வீழ்ந்த வங்காளதேச அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதே நேரத்தில் ஓமன் அணி தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

தொடர்புடைய செய்திகள்

1. ரபாடா ஹாட்ரிக்: 10 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி திரில் வெற்றி..!
டி 20 உலகக்கோப்பை போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி திரில் வெற்றிபெற்றது.
2. டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை வீரர் ஹசரங்கா புதிய சாதனை
டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை வீரர் ஹசரங்கா புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
3. டி-20 உலகக்கோப்பை: பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி வெற்றி
பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.