கிரிக்கெட்

இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டம்; 152 ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா + "||" + Practice match against India; Australia added 152 runs

இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டம்; 152 ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா

இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டம்; 152 ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா
இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 152 ரன்கள் எடுத்துள்ளது.
துபாய்,

7-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் ‘டாப்-8’ இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக ‘சூப்பர்-12’ சுற்றில் களம் இறங்குகின்றன. சூப்பர்-12 சுற்றில் விளையாட இருக்கும் அணிகள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கு பயிற்சி ஆட்டங்களில் ஆடுகின்றன.

அந்த வகையில் துபாயில் இன்று விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, தனது 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் , ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இதற்கு முன்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், பேட்டிங்கை தேர்வு செய்தார். அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர்(1) மற்றும் ஆரோன் பிஞ்ச்(8) தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்து வெளியேறினர். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ்(0) கேட்ச் ஆகி வெளியேறினார்.

இவ்வாறு ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ஸ்டீவன் ஸ்மித-மேக்ஸ்வெல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அரைசதத்தைக் கடந்த ஸ்டீவன் ஸ்மித், 57 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். க்ளென் மேக்ஸ்வெல் 37 ரன்களில் போல்ட் ஆனார். மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 25 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

இறுதியாக ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 2 விக்கெடுகளும், புவனேஸ்வர் குமார், ராகுல் சாஹர் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 153 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி போட்ட 946 பேர் மரணம்..! மத்திய அரசு
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்ட 946 பேர் மரணமடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. வானில் உள்ள இலக்கை தாக்கவல்ல ஏவுகணை சோதனை வெற்றி
வான் இலக்கை தாக்கும், குறுகிய தூர ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக சோதனை செய்தது.
3. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரமாக குறைந்தது
558 நாட்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
4. நாளை நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட்: 'ஆஷஸ்' பெயர் காரணம் தெரியுமா.?
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.
5. இந்தியா-தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்: புதிய அட்டவணை அறிவிப்பு
போட்டிக்கான புதிய அட்டவணையை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.