கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டம்; இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி + "||" + Practice match against Australia India won by 9 wickets

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டம்; இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டம்; இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துபாய்,

7-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் ‘டாப்-8’ இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக ‘சூப்பர்-12’ சுற்றில் களம் இறங்குகின்றன. சூப்பர்-12 சுற்றில் விளையாட இருக்கும் அணிகள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கு பயிற்சி ஆட்டங்களில் ஆடுகின்றன.

அந்த வகையில் துபாயில் இன்று விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, தனது 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் , ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இதற்கு முன்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் கேப்டனாக இன்று ரோகித் சர்மா செயல்பட்டார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர்(1) மற்றும் ஆரோன் பிஞ்ச்(8) தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்து வெளியேறினர். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ்(0) கேட்ச் ஆகி வெளியேறினார்.

இவ்வாறு ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ஸ்டீவன் ஸ்மித-மேக்ஸ்வெல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அரைசதத்தைக் கடந்த ஸ்டீவன் ஸ்மித், 57 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். க்ளென் மேக்ஸ்வெல் 37 ரன்களில் போல்ட் ஆனார். மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 25 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

இறுதியாக ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 2 விக்கெடுகளும், புவனேஸ்வர் குமார், ராகுல் சாஹர் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 153 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இதில் கே.எல்.ராகுல் 39 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அரைசதத்தை கடந்து விளையாடிய ரோகித் சர்மா 60 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார். இறுதியாக இந்திய அணி 17.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ்(38) மற்றும் ஹர்திக் பாண்டியா(14) இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டனாகிறார் பேட் கம்மின்ஸ்..!
ஆஸ்திரேலியாவின் 47-வது டெஸ்ட் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
2. பேய் நாயுடன் தனது செல்ல நாய் விளையாடியதாக ஒருவர் புலம்பல்...! வீடியோ
தனது செல்ல நாய் பேயாக வந்த ஒரு நாயுடன் விளையாடியதாக ஒருவர் கூறி சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உள்ளார். ஆனால் அதனை பலர் புரளி என மறுத்து உள்ளனர்
3. ரூ.11.25 லட்சத்திற்கு விலை போன ஆடு! சுவாரசியமான சம்பவம்
முன்னதாக 12 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் மதிப்புக்கு ஒரு ஆடு விலை போனதே சாதனையாக இருந்தது.இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.
4. மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை வீழ்த்தியது கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி
மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி வெற்றி பெற்றது.
5. ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் : ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
ஆஷஸ் தொடரின் முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.