கிரிக்கெட்

டி-20 உலகக்கோப்பை: 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது நமீபியா + "||" + T20 World Cup Namibia beat Netherlands by 6 wickets

டி-20 உலகக்கோப்பை: 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது நமீபியா

டி-20 உலகக்கோப்பை: 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது நமீபியா
நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் நமீபியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அபுதாபி,

ஐ.சி.சி. 20 ஓவர் உலகக்கோப்பை 2021 கிரிக்கெட் போட்டி கடந்த 17 ஆம் தேதி தொடங்கி தற்போது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. 

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் எராஸ்மஸ், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து நெதர்லாந்து அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மேக்ஸ் ஒடொவுட் 56 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். இது தவிர அதிகபட்சமாக கோலின் அகெர்மேன் 35 ரன்கள் அடித்து கேட்ச் ஆனார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நமீபியா அணி களமிறங்கியது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வெய்ஸ் 66 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து நமீபியா அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி : அழுத்தம்தான் இந்தியாவை தோல்வியில் தள்ளியது -இன்சமாம் உல் ஹக்
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அழுத்தம்தான் இந்தியாவை தோல்வியில் தள்ளியது என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்
2. டி20 உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும்? கெவின் பீட்டர்சன் கணிப்பு
டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணிகள் குறித்து கெவின் பீட்டர்சன் கணித்துள்ளார்.
3. நாளை டி20 உலகக்கோப்பை இறுதி போட்டி : வெல்லப்போவது யார் ...?
நாளை நடைபெறும் டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
4. அரை இறுதியில் தோற்றதால் எத்தகைய வேதனையில் இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும் - இம்ரான் கான்
பாகிஸ்தான் அணியினர் அரை இறுதியில் தோற்றதால் எத்தகைய வேதனையில் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
5. டி20 உலகக்கோப்பை அரை-இறுதிப் போட்டி; பாகிஸ்தான் 176 ரன்கள் குவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரை-இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி 176 ரன்கள் எடுத்துள்ளது.