கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் பேட்டின்சன் ஓய்வு + "||" + Pacer James Pattinson Announces Retirement From International Cricket

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் பேட்டின்சன் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் பேட்டின்சன் ஓய்வு
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் பேட்டின்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மெல்போர்ன், 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் பேட்டின்சன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் அவர் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் தனக்கு இடம் கிடைக்காது என்பதை உணர்ந்ததால் இந்த முடிவுக்கு வந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும் உள்ளூர் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

31 வயதான பேட்டின்சன் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்தார். கடைசியாக அவர் கடந்த ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆடினார். அவர் ஆஸ்திரேலிய அணிக்காக 21 டெஸ்டில் விளையாடி 81 விக்கெட்டும், 15 ஒருநாள் போட்டியில் ஆடி 16 விக்கெட்டும், 4 இருபது ஓவர் போட்டியில் ஆடி 3 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிறிஸ் கெய்ல் ஓய்வு?
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்த கிறிஸ் கெய்ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.