கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெற்றது வங்காளதேசம் + "||" + Bangladesh won by 84 runs against Papua New Guinea and enters the Super 12 stage in T20 World Cup.

டி20 உலகக்கோப்பை: சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெற்றது வங்காளதேசம்

டி20 உலகக்கோப்பை: சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெற்றது வங்காளதேசம்
டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி சூப்பர்-12 சுற்றுக்கு வங்காளதேசம் தகுதி பெற்றது.
அல் அமீரட்,

டி20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. அல் அமீரட் நகரில் இன்று நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில், பப்புவா நியூ கினியா அணியை வங்காளதேசம் எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.


அதன்படி, வங்காளதேச அணியின் தொடக்க வீரர்களாக நைம் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். 2 பந்துகளை சந்தித்த நைம் ரன் எதுவும் எடுக்காமலே (0) அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய சகிப் அல் ஹசன், தொடக்க வீரர் லிட்டன் தாசுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லிட்டன் தாஸ் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். சகிப் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த கேப்டன் மகமதுல்லா அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். அவர் 28 பந்துகளில் 3 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து  வந்த ஆபிஃப் ஹொசைன் 14 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய சைப்புதின் 6 பந்துகளை மட்டுமே சந்தித்து 2 சிக்சர்கள் 1 பவுண்டரியுடன் 19 ரன்கள் விளாசினார். இதனால் இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது.

இதனை தொடர்ந்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் பப்புவா நியூ கினியா அணியின் தொடக்க வீரர்கள் லேகா சியகா மற்றும் அஸ்ஸாத் வாலா களமிறங்கினர். லேகா 5 ரன்னிலும், அஸ்ஸாத் 6 ரன்னிலும் வெளியேறினர். இதனை தொடர்ந்து களமிறங்கிய பப்புவா நியூ கினியா வீரர்கள் வங்காளதேச அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.

எனினும் 8வது வீரராக களமிறங்கிய கிப்லின் டோரிகா நிலைத்து நின்று ஆடி,  அந்த அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார். அவர் 34 பந்துகளில் 2 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில்,  பப்புவா நியூ கினியா அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், பபுவா நியூ கினியா அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய வங்காளதேச அணியின் சகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில், வங்காளதேச அணி சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து அணி அபார வெற்றி
இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் வாங்காளதேசத்தை புரட்டி எடுத்தது.
2. வங்காளதேசத்துக்கு எதிரான 2-ஆம் டெஸ்ட்: வெற்றி வாய்ப்பில் நியூசிலாந்து அணி
3-ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை வங்காளதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.
3. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 126 ரன்களில் சுருண்ட வங்காளதேச அணி
முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி 126 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
4. வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 521 ரன்கள் குவித்து டிக்ளேர்
நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் 252 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
5. வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: இரட்டை சதத்தை நோக்கி டாம் லாதம்
முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்துள்ளது.