கிரிக்கெட்

இந்தியா-இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டியை எட்ஜ்பஸ்டனில் நடத்த முடிவு + "||" + India vs England 5th Test to be held in July 2022

இந்தியா-இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டியை எட்ஜ்பஸ்டனில் நடத்த முடிவு

இந்தியா-இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டியை எட்ஜ்பஸ்டனில் நடத்த முடிவு
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் டெஸ்டை வேறொரு நாளில் நடத்துவது என்று இரண்டு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக் கொண்டன.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த மாதம் மான்செஸ்டரில் நடக்க இருந்த இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட மறுத்தது. கொரோனா அச்சத்தால் இந்திய வீரர்கள் பின்வாங்கியதால் இந்த டெஸ்ட் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. தொடர்ந்து பலக்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த டெஸ்டை வேறொரு நாளில் நடத்துவது என்று இரண்டு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக் கொண்டன.

இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இந்த டெஸ்ட் அடுத்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடைபெறும் என்று நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. முன்பு இந்த டெஸ்ட் மான்செஸ்டரில் நடத்த திட்டமிடப்பட்டது. இப்போது அது எட்ஜ்பஸ்டனுக்கு மாற்றப்பட்டு உளளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டியை தொடர்ந்து இந்திய அணி அங்கு மூன்று 20 ஓவர் (ஜூலை 7, 9, 10) மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் (ஜூலை 12, 14, 17) விளையாடுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது.
2. மும்பை டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி
நியூசிலாந்து அணியைவிட 332-ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.
3. மும்பை டெஸ்ட்: இந்திய அணி அபார பந்து வீச்சு- நியூசிலாந்து 62 ரன்களில் ஆல் அவுட்
நியூசிலாந்துக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் இந்திய அணி 2-வது இன்னிங்சை துவங்கியுள்ளது.
4. ரஷிய அதிபர் இந்தியா வருகை - முக்கியமான 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!
இந்தியா - ரஷியா இடையே முக்கியமான 10 இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன என்று ரஷிய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.
5. 2 டெஸ்ட் போட்டிகளில் 4 கேப்டன்கள்: 132 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை டெஸ்டில் புதிய வரலாறு
ஏறக்குறைய 132 ஆண்டுகளுக்குப் பின் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் அணியை வழிநடத்தி சாதனை படைத்துள்ளனர்.