கிரிக்கெட்

டி 20 கோப்பையை வெல்ல இரு அணிகளுக்கு வாய்ப்பு: வார்னே கருத்து + "||" + T20 World Cup 2021: Shane Warne Picks His Favourites to Win Title, Bewares Teams For Underestimating Australia

டி 20 கோப்பையை வெல்ல இரு அணிகளுக்கு வாய்ப்பு: வார்னே கருத்து

டி 20 கோப்பையை வெல்ல இரு அணிகளுக்கு வாய்ப்பு: வார்னே கருத்து
டி 20 உலக்கோப்பையை வெல்ல இரு அணிகளுக்கு வாய்ப்பிருப்பதாக ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார்.
சிட்னி,
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வரும் ஐ.சி.சி டி 20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றுகள் இன்று தொடங்குகின்றன. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா மற்றும்  இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்த நிலைலில் டி 20 உலக்கோப்பையை வெல்லும் அணி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே  தனது கருத்துக்களை டுவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். அதாவது 20 ஓவர் உலக கோப்பையை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் வெல்வதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்திய அணியானது திறமையான பல இளம் வீரர்களுடன் களமிறங்கி தனது இரு பயிற்சி ஆட்டத்திலும் வெற்றிபெற்று புது உத்வேகத்துடன் களமிறங்குகிறது. இங்கிலாந்திலும் திறமையான வீரர்கள் உள்ளதால் அவர்களும் கோப்பையை வெல்ல  வாய்ப்பிருப்பதாக கூறிய வார்னே ஆஸ்திரேலிய அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. “திறமை தான் நிரந்தரம்” - டேவிட் வார்னருக்கு ஆதரவு தெரிவித்த ஷேன் வார்னே
டேவிட் வார்னரை அணியில் இருந்து நீக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.