கிரிக்கெட்

இந்தியா போன்ற பெரிய அணிகளுடன் மோதுவதை விரும்புகிறோம்- நமீபியா + "||" + We Didn't Come Here To Lie Down, We Want To Be Competitive Against Teams Like India: Namibia Coach

இந்தியா போன்ற பெரிய அணிகளுடன் மோதுவதை விரும்புகிறோம்- நமீபியா

இந்தியா போன்ற பெரிய அணிகளுடன் மோதுவதை விரும்புகிறோம்- நமீபியா
டி20 உலகக் கோப்பையில் இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக போட்டியிடுவதை விரும்புவதாக நமீபிய பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
ஷார்ஜா,

டி20 உலகக் கோப்பையில் நேற்று அயர்லாந்துக்கு எதிரான தகுதிச்சுற்று ஆட்டத்தில் நமீபியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

இது குறித்து நமீபிய அணியின் பயிற்சியாளர் பியர் டி ப்ரூயின் அளித்த பேட்டியில், சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இனி தான் எங்கள் அணிக்கு முக்கியமான போட்டிகள் காத்திருக்கின்றன.

இந்த வெற்றி எங்களுக்கு அடுத்து வரும் போட்டிகளில் விளையாட புது உத்வேகத்தை அளிக்கும். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடுவதை நாங்கள் மிகவும் விரும்புகிறோம். ஏனெனில் இது போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக விளையடும் போது அது எங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். எதிர்வரும் ஆட்டங்களில் எங்கள் முழு திறமையை வெளிப்படுத்தி எதிரணிகளுக்கு நெருக்கடியை கொடுப்போம் என்று அவர் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. 2022 மகளிர் உலகக் கோப்பை தொடர்: இந்திய அணி அறிவிப்பு
2022 உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணியை பி.சி.சி.ஐ இன்று அறிவித்தது.
2. டி-20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்து சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது நமீபியா
அயர்லாந்து அணிக்கு எதிரான தகுதிச்சுற்று ஆட்டத்தில் நமீபியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
3. டி-20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கு 126 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது அயர்லாந்து
நமீபியா அணிக்கு எதிரான இன்றைய தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 125 ரன்கள் எடுத்துள்ளது.
4. டி-20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நெதர்லாந்து
நமீபியா அணிக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 164 ரன்கள் எடுத்துள்ளது.
5. 20 ஓவர் உலகக் கோப்பை : நெட் பவுலராக வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கான் தேர்வு
இந்திய அணியின் நெட் பவுலராக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 21 வயதான உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்பட்டு இருந்த நிலையில் அவேஷ் கானும் அதில் இணைந்துள்ளார்.