கிரிக்கெட்

100 சதவீதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்- பாபர் அஸாம் சொல்கிறார் + "||" + We want to keep calm and not think about past results: Babar

100 சதவீதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்- பாபர் அஸாம் சொல்கிறார்

100 சதவீதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்- பாபர் அஸாம்  சொல்கிறார்
கடந்த கால வரலாற்றை விடுங்கள். நாங்கள் சிறப்பாகத் தயாராகி இருக்கிறோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸாம் தெரிவித்துள்ளார்.
துபாய்,

20- ஓவர் உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளை நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி. கிரிக்கெட் உலகில் பரம வைரிகளாக கருதப்படும் 
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை பொறுத்தவரை  உலக கோப்பை தொடர்களில் இந்தியாவை இதுவரை வீழ்த்தியது இல்லை. இதனால் கூடுதல் நெருக்கடியுடன் பாகிஸ்தான் அணி உள்ளது. 

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸாம்  செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எப்போதுமே நான் எளிமையாக இருக்கும் விஷயத்தில்தான் கவனம் செலுத்துவேன். என்னுடைய வழக்கமான ஆட்டத்தை விளையாடுவேன். ஒவ்வொரு பந்தையும் நிதானமாக ஆடுவேன். கடந்த கால வரலாற்றை விடுங்கள். நாங்கள் சிறப்பாகத் தயாராகி இருக்கிறோம். கடந்த கால வரலாறுகள், சாதனைகள் மாற்றப்படும்.

அனைத்து வீரர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். வீரர்களை ரிலாக்ஸாக வைத்திருக்கிறோம். நாளை போட்டி நடக்கும் நாளில் எவ்வாறு விளையாடுகிறோம் என்பதுதான் கேள்வி. எங்களிடம் சிறந்த வீரர்கள் இருப்பதால் இந்தியாவுக்கு எதிராகச் சிறப்பாக ஆடுவோம்.  100 சதவீதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்" என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. சீக்கிய புனித தளத்தில் பாகிஸ்தான் அழகி போட்டோ சூட்...இந்தியா அதிருப்தி
பாகிஸ்தான் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பின் முன்பு பாகிஸ்தான் மாடல் சவுலேஹா போட்டோசூட் நடத்தி, அதன் படங்களை வெளியிட்டிருந்தார்
2. ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை : நடுவர் மற்றும் மருத்துவ குழுவில் இந்திய அதிகாரிகள்...!
இந்தியாவின் சோனியா பத்லா இந்த உலக கோப்பை தொடரில் தொழில்நுட்ப அதிகாரியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3. உறுப்பு தானம் கிடைக்காததால் இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் உயிரிழப்பு
அறுவை சிகிச்சைக்கு தேவையான உடல் உறுப்புகள் கிடைக்காததால் இந்தியாவில் ஆண்டு தோறும் 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
4. கான்பூர் டெஸ்ட்: மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 2-ம் இன்னிங்ஸ்சில் 14 ரன்கள் சேர்ப்பு
மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 2-ம் இன்னிங்ஸ்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்துள்ளது.
5. நிதி ஆயோக் வெளியிட்ட இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியல்: பீகார் முதலிடம்
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியலில் பீகார் முதலிடத்தில் உள்ளது.