கிரிக்கெட்

டி-20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா போராடி வெற்றி + "||" + T20 World Cup Australia struggle and win the match against South Africa

டி-20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா போராடி வெற்றி

டி-20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா போராடி வெற்றி
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ‘சூப்பர் 12’ ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.
அபுதாபி,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் சுற்று நிறைவடைந்த நிலையில் ‘சூப்பர்-12’ சுற்று இன்று தொடங்கியுள்ளது. சூப்பர்-12 சுற்றில் குரூப்-1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

சூப்பர்-12 சுற்றின் முதல் நாளான இன்று (சனிக்கிழமை) இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு அபுதாபியில் தொடங்கிய முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அந்த அணியின் வீரர்கள் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பில்  அதிகபட்சமாக மார்க்ரம் 40 ரன்கள்  எடுத்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட் ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

இதையடுத்து 119 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி தற்போது பேட்டிங் செய்தது. அந்த அணியில் வார்னர்(14), ஆரோன் பிஞ்ச்(0), மிட்செல் மார்ஷ்(11) ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால் ஆஸ்திரேலிய அணி நெருக்கடிக்கு உள்ளானது. 

அடுத்து வந்தவர்களில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 35 ரன்கள் அடித்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. மார்க்கஸ் ஸ்டோய்னிஸ்(24) மற்றும் மேத்யூ வேட்(15) இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: டி காக் அபார சதம்
130 பந்துகளில் 124 ரன்கள் அடித்த டிகாக் , பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
2. 2-வது ஒருநாள் கிரிக்கெட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா
இந்தியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றியது.
3. டி20 உலகக்கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதல்...!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.
4. இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி- தொடரையும் வென்றது
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
5. கேப்டவுன் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 223- ரன்களுக்கு ஆல் அவுட்
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.