கிரிக்கெட்

“சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டம் நினைவில் இருக்கட்டும்” இந்திய ரசிகர்களுக்கு வாசிம் அக்ரம் எச்சரிக்கை + "||" + India haven't even won yet but celebrations have begun': Akram issues warning, says 'remember Champions Trophy final'

“சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டம் நினைவில் இருக்கட்டும்” இந்திய ரசிகர்களுக்கு வாசிம் அக்ரம் எச்சரிக்கை

“சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டம் நினைவில் இருக்கட்டும்” இந்திய ரசிகர்களுக்கு வாசிம் அக்ரம் எச்சரிக்கை
20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இஸ்லமாபாத்,

20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் கடந்த 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு தற்போதுதான் மோத உள்ளது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்திய - பாகிஸ்தான் ஆட்டம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியிருப்பதாவது;-

20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்னும் மோதவில்லை. ஆனால், இந்தியாவில் உள்ள ரசிகர்கள்  அதற்குள் வெற்றி கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டதாக தெரிகிறது.  இந்திய அணி வென்றபின் உங்கள் வெற்றிக் கொண்டாட்டத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், 2017-ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி இந்தியர்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன்.

நிச்சயமாக இந்த முறை பாகிஸ்தான் அணிதான் வெல்லப் போகிறது. பாகிஸ்தான் அணி வென்றால் என்னுடைய நடனத்தை இந்தியர்கள் பார்ப்பீர்கள். ரோகித் சர்மா, கோலியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருவரில் ஒருவர் நின்றுவிட்டால் மிகப்பெரிய ஸ்கோரை நோக்கி இந்திய அணி சென்றுவிடும்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 8,309 பேருக்கு தொற்று
இந்தியாவில் மேலும் 8,309 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. பலி எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது.
2. நான்காம் நாள் ஆட்டம் நிறைவு: நியூசிலாந்து வெற்றிபெற 280 ரன்கள் தேவை
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
3. கான்பூர் டெஸ்ட்: 4-ம் நாள் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 216 ரன்கள் முன்னிலை
4- நாள் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது.
4. கான்பூர் டெஸ்ட்; 2- வது இன்னிங்சில் இந்தியா திணறல்
கான்பூர் டெஸ்ட் போட்டியின் 4- ஆம் நாளான இன்று இந்திய கிரிக்கெட் அணி தடுமாறி வருகிறது.
5. இந்தியாவில் புதிதாக 8,774 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 621 பேர் பலி....!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.