கிரிக்கெட்

இந்தியா-பாகிஸ்தான் டி-20 ஆட்டம்; 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா + "||" + India Pakistan T20 match India lost 2 wickets in 3 overs

இந்தியா-பாகிஸ்தான் டி-20 ஆட்டம்; 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் டி-20 ஆட்டம்; 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ‘சூப்பர் 12’ சுற்று ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது.
துபாய்,

7-வது டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் ‘சூப்பர்-12’ சுற்றில், இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த உலக கோப்பை திருவிழாவில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கும் போட்டி இதுவாகும். இன்றைய ஆட்டம் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். பாகிஸ்தானின் ஷகீன் அப்ரிடி முதல் ஓவரை வீசினார். அவர் வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் ஷகீன் அப்ரிடி வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தில் கே.எல்.ராகுல் போல்ட் ஆகி அதிர்ச்சியளித்தார். தற்போது விராட் கோலி-சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்து பேட்டிங் செய்து வருகின்றனர். இதுவரை இந்திய அணி 3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா சிறப்பான தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளை வரையிலான ஆட்டத்தில் இந்திய அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
2. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: கான்பூரில் நாளை தொடங்குகிறது
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கான்பூரில் நாளை தொடங்குகிறது.
3. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்:பயிற்சியை தொடங்கிய இந்திய அணி
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை மறுநாள் ( வியாழக்கிழமை ) தொடங்குகிறது.
4. பூனையுடன் கிரிக்கெட் பயிற்சியில் விராட் கோலி..!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக ஒரு கையில் பூனையுடன் கோலி பயிற்சி செய்யும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
5. இந்தியா-சிங்கப்பூர் இடையே பயணிகள் விமான சேவை மீண்டும் தொடக்கம்
வருகிற 29-ந்தேதி முதல் இந்தியா-சிங்கப்பூர் இடையே பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது.