கிரிக்கெட்

45 பந்துகளில் அரைசதம் கேப்டன் விராட் கோலி;இந்தியா 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் + "||" + India-Pakistan T20 Virat Kohli scores fifty

45 பந்துகளில் அரைசதம் கேப்டன் விராட் கோலி;இந்தியா 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள்

45 பந்துகளில் அரைசதம் கேப்டன் விராட் கோலி;இந்தியா  18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள்
பாகிஸ்தானுக்கு எதிரான ‘சூப்பர் 12’ சுற்றில் விராட் கோலி அரைசதத்தைக் கடந்து விளையாடி வருகிறார்.
துபாய்,

7-வது டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் ‘சூப்பர்-12’ சுற்றில், இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த உலக கோப்பை திருவிழாவில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கும் போட்டி இதுவாகும். இன்றைய ஆட்டம் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். பாகிஸ்தானின் ஷகீன் அப்ரிடி முதல் ஓவரை வீசினார். அவர் வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் ஷகீன் அப்ரிடி வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தில் கே.எல்.ராகுல் போல்ட் ஆகி அதிர்ச்சியளித்தார். இதையடுத்து ஹசன் அலி வீசிய 6-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். பவர்பிளே முடிவதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. 

இதன் பிறகு ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்தனர். இவர்கள் சற்று நிதானமாக ஆடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ரிஷப் பண்ட்(39 ரன்கள்) ஷகத் கான் வீசிய பந்தை தூக்கி அடித்த போது கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜடேஜாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். 

இதனை தொடர்ந்து 18-வது ஓவரில் விராட் கோலி அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச ஆண்கள் டி 20 உலகக்கோப்பையில் அதிக முறை அரைசதம் கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நான்காம் நாள் ஆட்டம் நிறைவு: நியூசிலாந்து வெற்றிபெற 280 ரன்கள் தேவை
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
2. அறிமுக டெஸ்டில் சதம் மற்றும் அரைசதம்: ஸ்ரேயாஸ் அய்யர் புதிய சாதனை..!
முதல் இன்னிங்ஸ்சில் சதம் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸ்சில் அரைசதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் அய்யர் பெற்றார்.
3. கான்பூர் டெஸ்ட்: 4-ம் நாள் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 216 ரன்கள் முன்னிலை
4- நாள் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது.
4. கான்பூர் டெஸ்ட்; 2- வது இன்னிங்சில் இந்தியா திணறல்
கான்பூர் டெஸ்ட் போட்டியின் 4- ஆம் நாளான இன்று இந்திய கிரிக்கெட் அணி தடுமாறி வருகிறது.
5. இந்தியாவில் புதிதாக 8,774 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 621 பேர் பலி....!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.