கிரிக்கெட்

டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த கோலி! + "||" + T20 cricket: kohli breaks Chris Gayle record

டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த கோலி!

டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த கோலி!
பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி புதிய சாதனையை படைத்தார்.
துபாய்,

துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. 

இதில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 49 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 57 ரன்கள் விளாசினார்.  20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் அவர் அடித்த 10-வது அரைசதம் இதுவாகும்.

இதன் மூலம் கோலி புதிய சாதனையை படைத்தார். 20 ஓவர் உலக கோப்பை வரலாற்றில் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக 9 அரைசதம் அடித்திருந்தார். இந்த சாதனையை கோலி நேற்று முறியடித்தார். கோலி சிறப்பாக விளையாடினாலும் இறுதியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒமிக்ரான் வைரஸ்: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஜிம்பாவேயில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2. 3-வது டி20 : நியூசிலாந்துக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
டி20 போட்டியில் நியூசிலாந்துக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
3. டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.
4. இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து
2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து.
5. அனைத்துவித கிரிக்கெட்டிலிருந்தும் ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வு
அனைத்து வகையான கிரிக்கெட்டிலுமிருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.